Posts

Showing posts from November, 2009
Image

புதுப்புனல் அக்டோபர் இதழிலிருந்து - ரமேஷ் பிரேதனின் படைப்பு குறித்து..

Image
போதையைக் கொண்டாடும்  பித்தனின் குறிப்புகள்                                (ரமேஷ் பிரேதனின் 'சாராயக் கடை' கவிதைகள்) மனோ.மோகன் பாரதியின் பாடல் பெற்ற தலமான சித்தானந்த சுவாமி கோவிலுக்குச் சற்று தள்ளி சங்கரதாஸ் சுவாமிகளின் கல்லறையிருக்கும் சுடுகாட்டுக்கு எதிரே கிழக்குக் கடற்கரைச் சாலையோரத்திலிருக்கும் சாராயக்கடைக்கு ரமேசுடன் போவதுண்டு. [சாராயம் அருந்துவ தில்லையென்றாலும் சாராயக் கடைகளுக்கு அவ்வப்போது செல்வதுண்டு சிற்பங்களை ரசிப்பதற்காகவே கோவிலுக்குச் செல்வதுபோல].மதில்களில் விளையாடும் குரங்குக் குட்டிகளும் காலடியில் உரசிச் செல்லும் பன்றிகளும் பத்தடி தூரத்தில் வெட்ட வெளியில் மலம் கழிக்கும் ஆடவருமென அவ்விடத்தின் வாழ்க்கை நியதிகளே தனியானதாயிருக்கும். இருப்பதற்கு நிலமும் செரிப்ப தற்கு உணவுமில்லாத அதுபற்றிய கவலை சிறிதுமில்லாத உடல்களை அங்கே காணமுடியும். ஒவ்வொருமுறையும் இரண்டு ரூபாய் பணத்திற் காகவோ உண்ணும் மரவள்ளிக்கிழங்கிலாவது மணிலாக் கொட்டையி லாவது பங்கு கேட்பதற்காகவோ எவரேனும் அந்நியர் வந்து நிற்பார். நம்மைக் கவனிக்க வைக்க அவர் செய்யும் பாவனைகளில் ஓரங்க நாடகத்தின் அத்தனை நுணு

புதுப்புனல் அக்டோபர் மாத இதழிலிருந்து சில படைப்புகள்

Image
மீண்டும் மணிமேகலை! நாடகம் எழுதியவர் : லதா ராமகிருஷ்ணன் காட்சி – 1 இடம்: மங்கலான ஒளியூட்டப்பட்டிருக்கும் அரங்க. வரிசையாக இருக்கைகள் அமைந்துள்ளன. சன்னமான மெல்லிய இசையிழைகள் அரங்கில மிதந்துகொண் டிருக்கின்றன. கதாபாத்திரங்கள்: மணிமேகலை, நிகழினி மற்றும் பார்வையாளர்கள் ( திரு.வெளி ரங்கராஜன் இயக்கத்தில் உருவான மணிமேகலை நாடகத்தின் கடைசிப் பகுதி மேடையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.. பிரதான பெண் பாத்திரமான மணிமேகலை, ஒரு அழகிய இளம்பெண், அழியாப் புகழ் பெற்ற தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தின் கதாநாயகன் தன் மனதைப் பறிகொடுத்த மாதவியின் மகள் ஒரு துறவியின் உடையில் காட்சியளிக்கிறாள். அவள் உலக இன்பங்களுக்காகவும், புலனின்பக் கிளர்ச்சிகளுக்காகவும் தன் மனதை ஏங்கவிடலாகாது என்றும், மாறாக, மானுடம் பயனுற சேவை செய்வதிலே தன் மனதை ஒருமுகப்படுத்தவேண்டுமென்றும் கூறி அவளுடைய கையில் மணிமேகலா தெய்வம் சற்று முன்பு கொடுத்திருந்த அட்சயபாத்திரத்தை ஏந்திக் கொண்டிருக்கிறாள். அந்த தெய்வாம்சம் பொருந்திய பாத்திரத்தின் உதவியோடு அவள் எத்தனை பேருக்குத் தன்னால் உதவ முடியுமோ அத்தனை பேருக்குப் பசிப்பிணியைத் தீர்த்து