Posts

Showing posts from 2011

சிறுவர் கதைகள் - சாந்தி நூலக வெளியீடுகள் - புதுப்புனல்!

Image
படியுங்கள்! கடற்குதிரை மைலி யின் சமூகநேய சாகசங்கள் !! இதுவரை நான்கு சிறுவர் கதைகள் ’ருக்லதா’வின் கைவண்ணத்தில் வெளியாகியுள்ளன. இனியும் வரும்! பலூனுக்குள் அடைபட்டுக் கிடக்கும் கடற்குதிரை மைலி எப்படி வெளியே வருகிறது?   படித்துப் பாருங்கள் தெரியும்! மலை மேல் பூதமா? மைலி என்ன செய்யப் போகிறது? காற்றில் கட்டிடம் கட்ட முடியுமா? மைலி மனதுவைத்தால் முடியாதது உண்டா என்ன?! குளத்தில் விழுந்த குறிப்பிட்ட அந்தக் கூழாங்கல்லை மைலி எப் படி வெளியே எடுத்தது? கதையைப் படித்தால் தானே தெரியும்!

நேர்காணலின் முக்கியத்துவம் - புதுப்புனல் வாசகவட்டம்

[நேர்காணலின் முக்கியத்துவம் - புதுப்புனல் வாசகவட்டம்                                                                        [ஜீன் 2010  புதுப்புனல் வாசக வட்டம்] 27.06.2010 _லதா ராமகிருஷ்ணன் எழுத்துவடிவத்திற்கு முன்பாய் மனிதர்களைப் பிணைக்கும் விஷயமாக இருந்துவருவது பேச்சு. உரையாடலினூடாய் ஒரு மனிதரை அவர் மனவோட்டத்தைப் புரிந்துகொள் வதும், பரிச்சயப்படுத்திக் கொள்வதும் என்றுமே அலுக்காத ஒன்று. ஒரு ஆளுமையின் மூலத்தை அறிந்துகொள்ளவும் சரி, சாதாரண மனிதர்களுக்குள் உறைந்துகிடக்கும் அசாதாரணங்களை அடையாளங்கண்டுகொள்ளவும் சரி உரையாடலாய் விரியும் நேர்காணல்கள் பெரிதும் உதவுகின்றன. இத்தகைய பல காராணங் களால் நேர்காணல்கள் பத்திரிகைகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. நேர்காணலின் அவசியம் பற்றி, அரசியல் பற்றி, நேர்காணல் அமையவேண்டிய விதம் குறித்து, அமைகின்ற விதங்கள் குறித்து என நேர்காணல் என்ற எழுத்துவகையின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் களமாக ஜூன் மாத புதுப்புனல் வாசகவட்டம் அமைந்தது. எழுத்தாளர்கள் வேட்டை கண்ணன், கிருஷாங்கினி, திரு, பாலைநிலவன், லதா ராமகிருஷ்ணன், மு.ரமேஷ், தவசி(இவர்கள் இருவர

நான்காவது தூண் - புதுப்புனல் தலையங்கம்

Image
புதுப்புனல் தலையங்கம் நான்காம் தூண்: 24 மணிநேரத் தொலைக்காட்சிச் செய்தி அலைவரிசைகள் இன்று தமிழிலும், ஆங்கிலத்திலும் 24 மணிநேர தொலைக்காட்சிச் செய்தி அலைவரிசைகள் மாநிலங்கள் அளவிலும், தேசிய அளவிலும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால், இவை இயங்கும் விதம், இவற்றின் செயல்பாடுகள் ஆகியவை அத்தனை திருப்திகரமாக இருக்கிறது என்று சொல்லமுடியாத நிலை. 24 மணிநேரச் செய்திகள் என்கிறார்களே தவிர பெரும்பாலும் திரும்பத்திரும்ப நான்கு செய்திகளைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய ‘சுடச்சுடச் செய்திகளுக்குப் பழைய புகைப்படங்களை சகட்டுமேனிக்கு வெளியிடு கிறார்கள். தலைவர்களின் படங்கள் போன்றவையென்றால் பரவாயில்லை. ஆனால், இன்றைய வெள்ள அபாய நிலைமை குறித்த செய்திக்குக் கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கைக் காட்டினால்...? இன்றைய ரயில்விபத்தில் இறந்தவர் குறித்த செய்தியின்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களைக் காட்டினால்...? தற்போதைய பேரிடர் குறித்து ஒரு தலைவர் அக்கறையோடு கருத்துரைத்திருக்கும் செய்திக்கு அவர் என்றோ வாயெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டிருக்கு

எழுத்தாளர் தவசியின் கட்டுரை - புதுப்புனல் இதழில்!

Image
கட்டுரை எல்லை மீறும் விளம்பரங்களும் சில கேள்விகளும்.. ம. தவசி Ô யுத்தம் நடந்த காலை வேளையிலே நெப்போலியனோட மெமரி லாஸாகியிருந்ததா..? புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்த நியூட்டன் டயடா தூங்கியிருந்தா..? பானிப்பட் போரில் அக்பருக்கு வயிறு கெட்டுப் போயிருந்தா..? என கூறிக் கொண்டிருக்கும் போதே இந்த வரலாற்று நாயர்களின் காலத்தில் குழந்தைகள் நடித்துக் காட்டும். கூடவே தாளமுடியாத சிரிப்பு. இப்படியான வித்தியாச சிந்தனைக்கு, மூளை வளர்ச்சிக்கு நீங்கள் Ôஇதை..Õ குடிங்க.. சுற்றிலும் போருக்கான ஆயத்தம் நடந்து கொண்டிருக்கும். மகாராணி வெற்றித் திலகம் இட, ஆரத்தி தட்டோடு வருவார். அப்போது பத்து தலை ராவணனின் முகத்தில் சலிப்பு; சோர்வு. மன்னா வெற்றி பெற வாழ்த்துக்கள் என பொட்டு வைக்க, இந்த தலைவலியைப் போக்க, ஒரு திலகம் இருக்கிறதா..? உடனே ரிஷிகள் எல்லாம் சேர்ந்து பழங்கால தாவரங்களை யாக குண்டத்தில் போட்டு ஒரு தைலம் தயாரிப்பார்கள். அதை கொண்டு வந்து கொடுக்க ராவணன் அவர், தலையில் பூசிக்கொள்ள பத்து தலைக்கும் ஒளி பரவி வலி நிவாரணம் கொடுக்கும்; பின் அவர் எங்கு போவார் தெரியுமா..? கையில் மட்டையுடன் கிரிக்கெ

புதுப்புனல் மே இதழில் - ராஜ விளையாட்டு - ஸ்டீஃபான் ஜ்ஸ்வேய்க் குறுநாவல் தொடர்ச்சி

Image
(மே இதழ் புதுப்புனலில்) ராஜ விளையாட்டு (தொடர்ச்சி) முதல் தடவையாக, என்னுடைய துணிகரமான திருட்டின் அளப்பரிய அனுகூலத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன் நான். திடீரென, நான் ஒரு வேலையில் ஈடுபட்டிருந்தேன். இலக்கில்லாதது, பயனற்றது என்று சொல்லிக்கொள்ளுங்கள் – பரவாயில்லை, ஆனால், எப்படியிருந்தாலும் சரி, அது என்னைச் சுற்றிப் படர்ந்திருந்த வெறுமையை இல்லாம லாக்கிய ஒரு வேலை தான். இந்த 150 பந்தய விளையாட்டுகள் மூலம் இடம் மற்றும் காலத்தின் ‘ஆளை நசுக்கிப் போடும் இயந்திரத்தனத்திற்கு எதிராக ஒரு அதியற்புத ஆயுதம் என் கைவசமாகியிருந்தது! இந்தப் புதிய வேலையின் ஈர்ப்பையும், கவர்ச்சியையும் பத்திரமாக, ‘உள்ளது உள்ளபடி’ பராமரிக்க நான் என்னுடைய ‘நாளை’ இதுமுதல் ம்கச் சரியாகப் பகுத்துக் கொண்டேன்; காலையில் இரண்டு விளையாட்டுகள், மதியம் இரண்டு, மாலையில் காலை விளையாட்டுகளை சடுதியில் மீள்பார்வைக் குட்படுத்துதல். அந்த வழியில் என்னுடைய நாள், இதுவரை உருவற்ற, இறுகாத இனிப்புப் பாகாய் கிடந்தது, திருத்தமான வடிவத்தைப் பெற்றது. என்னை ஒரேயடியாக அயர்ச்சியடையச் செய்யாமல், அதேநேரம் செயல்பட்டுக்கொண்டேயிருந்தேன். ஏனெனில், சதுரங்க

கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது!

Image
கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது! மரம் நடுவிழா வைபவத்தில் நட்டு நிறுத்தப்படுகிறது. விழா எடுக்காமலும் தெருவோரம் ஏதோ ஒரு பெயர் தாங்கிய இரும்பு வேலியின் நடுவில். நீர் அதிகம் கோராது விலங்குகள் அண்டாது, நின்று வேகமாய் வளரும். கிளையின் நுனியில் பெரிதாய் விரிந்து கண் பறிக்கும் வண்ணம் காட்டி வாசனை காட்டி கவர்ச்சி காட்டாமல் திசை திருப்பாது மெல்லிய சிறு பூக்கள் உச்சியில் பூக்கும் பூப்பது தெரியாமல். தானாக உதிரும் சிறுபூக்கள் கொண்டு கண்டடையலாம் இதன் வசந்ததை மென்மேலும் வளர்ந்து வானெட்ட முயலாது ஒரு போதும். பாங்காக ஐந்தடிக்குள் தன் உடலை நிறுத்தி வைக்கும் எனினும் கிளை விரித்து நிழல் பரப்பும் பெருங் கொடையாய். ரயிலடியில் ஒன்றுக்கும் மேலாய் ஒரே சிமெண்ட் வட்டத்துக்குள் முரணின்றி இணைந்து வளரும் எல்லோருக்கும் உகந்த தாய் எப்போதும் உறுத்தாததாய். ஆங்காங்கே வளர்ந்து நிற்கும் இமை மூடி சிதறிக் கொட்டும் தன் கண்கள் தரை மீது காலடி தளம் பரப்பி. ஆனாலும் கூட இடநெடுக்கடியில் சற்றே இடம் மாறி குறுக்காக வளர முற்பட்டால் சட்டென்று முறிக்கப்பட்டு நிற்கும் இப்ப

கவிஞர் துவாரகை தலைவன் நூல்கள் வெளியீட்டுவிழா புகைப்படங்கள்

Image
- துவாரகை தலைவன் எதிரொலி  என் இரவின் கழுத்தைக் கவ்விச் செல்கிறது பூனை. நெஞ்சை யழுத்து மந்த இரவினோசை திசையறியாச் சிறகுகளின் படபடப்பு. இருளின் முடியாத சுரங்கக் குழாயினுள் தலையற்ற தேவதை அசைத்துச் செல்லும் வெள்ளை யிறக்கைகளாய் தோட்டத்திலிருந்த வளர்ப்புப் புறாவின் போராட்டம். இறுக்கமாய்ப் பற்றி மரணத்திற்கு அழைத்துப் போகும் சிறு வேட்டை மிருகத்தின் எச்சில் நூல் காற்றில் நீண்டு அறுந்த போது என்னில் ஏதோ ஒன்று தொடர்பிழக்கும். சில நினைவுகளை எட்டி உதைத்துப் புறந்தள்ளி நடக்கும் காலத்தின் பாதங்கள் ஒரு மாலை பெரும் அரங்கத்தினுள் மெல்லிய இசையாய் மிதந்தது. அவள் பேச்சை அப்படியே திரும்பச் சொல்லும் கிளிகள் என் உள்ளம் போன்றவை. பொருளறியாது வெறும் ஓசைகளை உமிழும். என் நெஞ்சத்தின் அலகுகள் அவள் கண்கள் மிதக்க விடும் அர்த்தத்தைக் கொறித்தன. அவள் விரலசைவை விழியசைவை எப்படிப் பேசிக்காட்டுவது? பேச்சுக்கு இடையே வரும் புன்னகை கிரணங்களில் கண்கூசித் திகைத்த பறவைகள் குதித்தது நடனமானது. என் உள்ளமோ போலித்தனமில்லா அப்புன்முறுவலின் இடுக்கில் சிக்கி பலியானது. கூட்டுக் கம்பி

புதுப்புனல் மாத இதழ் - தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது!

Image
புதுப்புனல் தலையங்கம் சமீபத்திய ஜப்பான் பேரழிவு – -சக மனிதர்களின் வலியுணர்வோம் ஹிரோஷிமா-நாகசாகியில் இரண்டாம் உலகப்போரின் சமயம் போடப்பட்ட அணுகுண்டுகளால் சின்னாபின்னமாக்கப்பட்டும் தன் விடா முயற்சியாலும் அயரா உழைப்பாலும் இன்று உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்கும் ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட தீவிர அளவிலான நிலநடுக்கமும் அதன் விளைவாக ஏற்பட்ட ஆழிப்பேரலைத் தாக்கமும் மிகக் கடுமையான, கொடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. பொருள் இழப்புகளும், உயிரிழப்புகளும் மிகவும் அதிகம். அதே சமயம் ஜப்பான் நாட்டின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாதிருப்பின் சேதம் இப்போது நேர்ந்திருப்பதைவிட பல மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்பது தெளிவு. ஜப்பான் மக்களின் வலிகளையும், இழப்புகளையும் நம்மால் சக-மனிதர்களாக நன்றாகவே உள்வாங்கிக்கொள்ள முடியும்; முடியவேண்டும். சமீபத்தில் நடிகர் தனுஷ் பேசுவதாக அடிக்கடி முன்னணித் தொலைக்காட்சி அலைவரிசைகளில் காண்பிக்கப்பட்ட திரைப்பட விளம்பரக் காட்சியில் “நாங்கள்ளாம் சுனாமியிலேயே ஸ்விம்மிங் அடிக்கிறவங்க” என்பதாய் வரும் வசனத்தை இந்தப் பேரழிவின் பின்னணியில் நினைத