Posts

Showing posts from 2009
Image

புதுப்புனல் அக்டோபர் இதழிலிருந்து - ரமேஷ் பிரேதனின் படைப்பு குறித்து..

Image
போதையைக் கொண்டாடும்  பித்தனின் குறிப்புகள்                                (ரமேஷ் பிரேதனின் 'சாராயக் கடை' கவிதைகள்) மனோ.மோகன் பாரதியின் பாடல் பெற்ற தலமான சித்தானந்த சுவாமி கோவிலுக்குச் சற்று தள்ளி சங்கரதாஸ் சுவாமிகளின் கல்லறையிருக்கும் சுடுகாட்டுக்கு எதிரே கிழக்குக் கடற்கரைச் சாலையோரத்திலிருக்கும் சாராயக்கடைக்கு ரமேசுடன் போவதுண்டு. [சாராயம் அருந்துவ தில்லையென்றாலும் சாராயக் கடைகளுக்கு அவ்வப்போது செல்வதுண்டு சிற்பங்களை ரசிப்பதற்காகவே கோவிலுக்குச் செல்வதுபோல].மதில்களில் விளையாடும் குரங்குக் குட்டிகளும் காலடியில் உரசிச் செல்லும் பன்றிகளும் பத்தடி தூரத்தில் வெட்ட வெளியில் மலம் கழிக்கும் ஆடவருமென அவ்விடத்தின் வாழ்க்கை நியதிகளே தனியானதாயிருக்கும். இருப்பதற்கு நிலமும் செரிப்ப தற்கு உணவுமில்லாத அதுபற்றிய கவலை சிறிதுமில்லாத உடல்களை அங்கே காணமுடியும். ஒவ்வொருமுறையும் இரண்டு ரூபாய் பணத்திற் காகவோ உண்ணும் மரவள்ளிக்கிழங்கிலாவது மணிலாக் கொட்டையி லாவது பங்கு கேட்பதற்காகவோ எவரேனும் அந்நியர் வந்து நிற்பார். நம்மைக் கவனிக்க வைக்க அவர் செய்யும் பாவனைகளில் ஓரங்க நாடகத்தின் அத்தனை நுணு

புதுப்புனல் அக்டோபர் மாத இதழிலிருந்து சில படைப்புகள்

Image
மீண்டும் மணிமேகலை! நாடகம் எழுதியவர் : லதா ராமகிருஷ்ணன் காட்சி – 1 இடம்: மங்கலான ஒளியூட்டப்பட்டிருக்கும் அரங்க. வரிசையாக இருக்கைகள் அமைந்துள்ளன. சன்னமான மெல்லிய இசையிழைகள் அரங்கில மிதந்துகொண் டிருக்கின்றன. கதாபாத்திரங்கள்: மணிமேகலை, நிகழினி மற்றும் பார்வையாளர்கள் ( திரு.வெளி ரங்கராஜன் இயக்கத்தில் உருவான மணிமேகலை நாடகத்தின் கடைசிப் பகுதி மேடையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.. பிரதான பெண் பாத்திரமான மணிமேகலை, ஒரு அழகிய இளம்பெண், அழியாப் புகழ் பெற்ற தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தின் கதாநாயகன் தன் மனதைப் பறிகொடுத்த மாதவியின் மகள் ஒரு துறவியின் உடையில் காட்சியளிக்கிறாள். அவள் உலக இன்பங்களுக்காகவும், புலனின்பக் கிளர்ச்சிகளுக்காகவும் தன் மனதை ஏங்கவிடலாகாது என்றும், மாறாக, மானுடம் பயனுற சேவை செய்வதிலே தன் மனதை ஒருமுகப்படுத்தவேண்டுமென்றும் கூறி அவளுடைய கையில் மணிமேகலா தெய்வம் சற்று முன்பு கொடுத்திருந்த அட்சயபாத்திரத்தை ஏந்திக் கொண்டிருக்கிறாள். அந்த தெய்வாம்சம் பொருந்திய பாத்திரத்தின் உதவியோடு அவள் எத்தனை பேருக்குத் தன்னால் உதவ முடியுமோ அத்தனை பேருக்குப் பசிப்பிணியைத் தீர்த்து

புதுப்புனல் அக்டோபர் 2009 இதழ் வெளிவந்துவிட்டது! வாங்கிப் படியுங்கள்!!

Image

புதுப்புனல் வெளியீடுகள்! - புதுப்புனலில் விற்பனைக்கு உள்ள நூல்கள்!

தரமான தமிழ் இலக்கிய நூல்கள் கிடைக்குமிடம் புதுப்புனல் பதிப்பகம்! நவீனத் தமிழ் இலக்கியத்தின் பன்முகம் புதுப்புனல் வெளியீடுகளாய்! தமிழின் நவீன கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்புநூல்கள் இன்னும் பலப்பலப்பல இங்கே உண்டு! இன்றே வாங்கிடுவீர்! * மனதின் குளுமைக்கும் கொந்தளிப்புக்கும் கனவுக்கும் கசப்புக்கும் கவிதை தவிர வேறேது வடிகால்? நவீன தமிழ்க்கவிதைத் தொகுப்புகள் புதுப்புனல் பதிப்பகத்தில் நிறையவே உண்டு! * வேற்றுமையில் ஒற்றுமை காண, உலகின் பல்வேறு நாடுகளின் மனிதர்களை அவர்களுடைய வாழ்முறைகளை கனவுகளை, நம்பிக்கைகளை, உள்வாங்கிக் கொள்ள உதவும் மொழிபெயர்ப்பு நூல்கள் பலப்பல இங்கே புதுப்புனலில் உண்டு! * ’நகரத்தின் சில வடிவங்கள்’ பன்முகம் இதழ்களில் வெளியான நவீன தமிழ்ச் சிறுகதைகள் தொகுப்பாசிரியர் ஆர்.ரவிச்சந்திரன் பார்வையற்றோரின் படைப்புகளும், பார்வையற்றவர்களின் திறமைகள், பிரச்னைகள் குறித்த நூல்களும் இங்கே கிடைக்கும்! ஆறே புள்ளிகளில் அகிலமெங்கிலுமுள்ள பார்வையற்றோருக்கு அறிவுக்கண் கிடைக்கச் செய்த லூயி ப்ரெயிலை நினைவுகூர்வோம் – வாங்கிப் பட

புதுப்புனல் பதிப்பக வெளியீடுகள்!

மழையில் நனையும் இரவின் வாசனை - மு.ரமேஷ் கவிதைத் தொகுப்பு

Image

புதுப்புனல் ஆசிரியர் ஆர்.ரவிச்சந்திரன் , நிர்வாக ஆசிரியர் திருமதி சாந்தி ரவிச்சந்திரன் புத்தகக் கண்காட்சியில்...

Image

பாயத் தொடங்கிவிட்டது புதுப்புனல்!

Image
புதுப்புனலுக்கு தேவையில்லை பிரகடனம்! நீர்வளமே அதன் நிரூபணம்!! கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக காலாண்டிதழாக வெளிவந்து நவீன தமிழிலக்கியத்திற்கு குறிப்பிடத்த பங்காற்றிய பன்முகம் இதழைக் வெளியிட்டுவந்த புதுப்புனல் பதிப்பகம் புதுப்புனல் என்ற பெயரில் ஒரு மாத இதழை இந்த மாதத்திலிருந்து வெளியிடத் தொடங்குகிறது. புதுப்புனல் பதிப்பகம் நடத்தி வரும் திரு.ஆர்.ரவிச்சந்திரன் இதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். திருமதி சாந்தி ரவிச்சந்திரன் – நிர்வாக ஆசிரியர். கதை, கவிதை, கட்டுரை, புதிய எழுத்தாளர்கள் அறிமுகம், பதிப்பகத்தின் குறிப்பிடத்தக்க நூல் வெளியீடுகள் குறித்த விவரங்கள் என பல பகுதிகளைக் கொண்டதாக அமையும் புதுப்புனல் இதழுக்கு படைப்புகள் அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிக்குக் கடிதம் எழுதவும் அல்லது கீழ்க்கண்ட கைபேசியைத் தொடர்பு கொள்ளவும். · மாதாமாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை புதுப்புனல் அலுவலகத்தில் புதுப்புனல் வாசகர் வட்ட நிகழ்வுகள் நடைபெறும். · சந்தா விவரங்கள் தரப்பட்டுள்ளன. · விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல் இதழில் இடம்பெறும் படைப்புகள்: · நிலவில் நடை – மைக்கேல் ஜாக்ஸன் சுயசரிதையில